டெல்லி: இந்தியா தலைமை தாங்கிய ஜி20 மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் டெல்லிக்கு நேற்றைய முன்தினம் (செப் 8) வந்தனர். இதனையடுத்து இரு நாட்கள் ஜி20 மாநாடு சிறப்பு விவாதங்கள் நிகழ்த்தப்பட்டன. முக்கியமாக, பசுமை வளர்ச்சி, காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், அடுத்த ஜி20 மாநாட்டை தலைமை தாங்கும் பிரேசில் அதிபரிடம் ஜி20 தலைமையை பிரதமர் மோடி வழங்கினார்.
-
Had a wonderful chat with @POTUS @JoeBiden at the #G20 Summit in #NewDelhi.
— Saima Wazed (@drSaimaWazed) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
I spoke to him about the importance of #MentalHealth services as a part of comprehensive #PublicHealth, and school psychologists in the education system. pic.twitter.com/DojjytpoQP
">Had a wonderful chat with @POTUS @JoeBiden at the #G20 Summit in #NewDelhi.
— Saima Wazed (@drSaimaWazed) September 9, 2023
I spoke to him about the importance of #MentalHealth services as a part of comprehensive #PublicHealth, and school psychologists in the education system. pic.twitter.com/DojjytpoQPHad a wonderful chat with @POTUS @JoeBiden at the #G20 Summit in #NewDelhi.
— Saima Wazed (@drSaimaWazed) September 9, 2023
I spoke to him about the importance of #MentalHealth services as a part of comprehensive #PublicHealth, and school psychologists in the education system. pic.twitter.com/DojjytpoQP
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் உடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இதனிடையே ஜி20 மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகன் சைமா வசாத் ஆகியோர் செல்பி எடுத்துக் கொண்டனர். தற்போது, இந்த செல்பி புகைப்படம் சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பேசிய பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சர், “ஆம். இந்த நிகழ்வின்போது அதிபர் பைடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர், தனது நண்பரிடம் இருந்து மொபைலைப் பெற்றார். ஏனென்றால், அவர் புகைப்படம் எடுப்பது மிகவும் கடினம் என்பதை உணர்ந்தார். அது ஒரு விளையாட்டுத்தனமானது. இது மிகவும் நன்றாக இருந்தது. சமநிலை நன்றாக இருந்ததை நான் உணர்கிறேன். நீங்கள் அவர்கள் உடைய முகங்களைப் பாருங்கள். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது ஒரு அற்புதமான நேரம் என நான் கூறுவேன்” என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா - பங்களாதேஷ் இடையிலான உறவை இந்த புகைப்படம் எந்த அளவு பிரதிபலிக்கிறது என்பதும், வருகிற 2024 பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனா நெருக்கடியான சூழலைச் சந்திக்க நேரிடும் என பங்களாதேஷ் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம், சுகாதார நிகழ்ச்சிகள், குடியரசு, அடிப்படை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் போன்றவற்றுடன் தொடர்புடைய பங்களாதேஷ் அரசால் செயல்படுத்தப்படும் சர்வதேச வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த நாடுகளின் முகமை ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.
இந்த நிலையில், இது தொடர்பாக தாக்காவில் உள்ள ஜஹாங்கிர் நகர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியர் சஹாப் எனாம் கான் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “ஜனநாயக தேர்தல் செயல்முறையை குறை மதிப்பிடுதலுக்கு உட்படுத்தும் பங்களாதேஷ் மக்களுக்கு விசா மறுப்பது தொடர்பான புதிய கொள்கையை அமெரிக்க அரசு மே மாதம் வெளியிட்டது. இதற்கு பங்களாதேஷ் அரசு கோபம் அடைந்தது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளில் இருந்து நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்களை உறுதி செய்ய அழுத்தம் கொடுக்கும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் கடினமானதாக இருக்கும். இவ்வாறான இறுக்கமான நடைமுறைக்கு மத்தியில் ஹசீனா நன்றாக சமநிலையை ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: 'RRR' படத்தைப் பாராட்டிய பிரேசில் அதிபர் லூலா - நன்றி தெரிவித்த ராஜமௌலி!