சிம்லா (இமாச்சல பிரதேசம்): மாநிலத்தின் பொன் விழா நிகழ்வில் உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இதுகுறித்து பேசிய மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், “சுமார் 2000 பேர், இமாச்சல பிரதேச பொன் விழா நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். மாநிலத்தின் 50 ஆண்டுகால பெருமைகளை குறிக்கும் வகையிலான, கண்காட்சிகள் இந்நிகழ்வில் இடம்பெறும்.
ஆளுநர் பண்டாரு டட்டாத்ரேயா தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் இந்நிகழ்வில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.
பொன் விழாவை சிறப்பிக்கும் விதமாக பிரத்யேக அஞ்சல் தலை வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக இந்த ஆண்டு முழுவதிலும் 51 நிகழ்ச்சிகள் அரசால் நடத்தப்பட இருக்கிறது” என்று தெரிவித்தார்.