ஹைதராபாத்: இன்று (செப்.21) காலை ஒரே நேரத்தில் சைரன் ஒலியுடன் பலரது செல்போனிற்கு வந்து குறுஞ் செய்தியினால் பதற்றம் ஏற்பட்டது. திடீரென அனைவரின் செல்போனும் சைரன் சத்தத்துடன் ஒலித்ததால் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. அவசரக் காலங்களில் மக்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக இது போன்ற அவசர கால குறுஞ் செய்திகளை பொது மக்களின் செல்போனிற்கு அனுப்ப ஒரு வாரத்திற்கு முன்பே மத்திய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பாக அவசர எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் சோதனை ஓட்டமாக இன்று (செப் .21) பலரது செல்போன் எண்ணுக்கு சைரன் ஒலியுடன் குறுஞ் செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திடீர் ஒலியுடன் கூடிய குறுஞ்செய்தியால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று (செப்.21) காலை ஒரே நேரத்தில் சைரன் ஒலியுடன் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து அவசர எச்சரிக்கை அனைவரின் செல்போன் எண்ணிற்கும் வந்த வண்ணம் உள்ளன. இது மத்திய அரசால் அவசரக் கால நிலைக்குப் பயன்படுத்துவதற்காக அனைவரின் செல்போனிற்கு இந்த அவசர எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் மக்களைத் தயார் செய்ய இந்த அவசர எச்சரிக்கை குறுஞ்செய்தி பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சோதனை மாதிரியாக இந்த அவசர குறுஞ்செய்தி தற்போது அனைவருக்கும் அனுப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பயப்படத் தேவையில்லை என கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வாடகை கார் ஓட்டுநர் வங்கியில் டெபாசிட்டான ரூ.9ஆயிரம் கோடி.. இன்ப அதிர்ச்சியில் மிரண்டு போன ஓட்டுநர்!