இந்தியாவின் முன்னணி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இந்தியா நிறுவனம் கோவாக்ஸ்(COVAX) தடுப்பூசி உற்பத்தியை இன்று (ஜூன் 25) தொடங்கியுள்ளது.
அமெரிக்கவைச் சேர்ந்த பையோடெக்னாலஜி நிறுவனமான நோவாவாக்ஸ் என்ற நிறுவனம் இந்த கோவாக்ஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதன் செயல்திறன் 89% என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய சீரம் இந்தியா நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.
தற்போது இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கிய நிலையில், ஒரு வாரத்தில் முதல் பேட்ச் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். இதற்கான பணிகள் புனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் தொடங்கியுள்ளது என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஆஸ்ட்ரா செனேகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் இந்திய நிறுவனம் உற்பத்தி செய்துவருகிறது.
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பூசிக்கு இனி ஆதார் எண் தேவையில்லை