ETV Bharat / bharat

எது மோடி அரசின் சாதனை? - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதிலடி! - மோடி அரசின் சாதனைகள் குறித்து கட்டுரை

நாட்டில் மோடி அரசு சில இடங்களில் நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள்தான் காரணம் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மோடி அரசின் சாதனைகள் குறித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கட்டுரைக்கு ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

Senior Congress
மோடி
author img

By

Published : Jun 26, 2023, 12:40 PM IST

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து மோடி அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகள் குறித்து பாஜக தலைவர்கள் பலரும் பரப்புரை செய்து வருகின்றனர். பல மாநிலங்களில் பாஜகவினர் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆங்கில நாளிதழ் ஒன்றில், மோடி அரசின் சாதனைகள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், மோடி அரசின் பல சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார். அதேபோல், எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த கட்டுரையின் சாராம்சங்களை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கட்டுரையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள விஷயங்களுக்குப் பதில் அளித்துள்ளார்.

அதில், "நிதியமைச்சர் மோடி அரசின் சாதனைகள் குறித்து கட்டுரை எழுதியுள்ளார். அதில், எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக, நீதிமன்றத்திற்குச் சென்று தோற்றதற்கான ஐந்து எடுத்துக்காட்டுகளை நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் மூன்று உதாரணங்களை தவறாக கூறியுள்ளார். ஒன்று, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவே, முத்தலாக் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அதேபோல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை. ஜிஎஸ்டி தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மோடி ஆட்சியில், பால், தேன், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை எட்டியதாக நிதியமைச்சர் பெருமையாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முதலிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டவை, தற்போது அதே இடத்தில் நீடிக்கிறோம் அவ்வளவுதான்.

நேரடிப் பயன் பரிமாற்றம்(DBT - Direct Benefit Transfer) மோடி அரசின் சாதனை என்று நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், ஆதார் முந்தைய காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. நேரடிப் பயன் பரிமாற்ற சேவையை தொடங்கி வைத்ததும் காங்கிரஸ் அரசு என்பதை அவர் மறந்துவிட்டார்.

மோடி ஆட்சியில் 11.72 கோடி கழிவறைகள் கட்டப்பட்டதாக நிதியமைச்சர் பெருமிதம் கொள்கிறார். அவற்றில் எத்தனை பயன்படுத்தப்படாமல் உள்ளன, தண்ணீர் இல்லாததால் எத்தனை கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்பது தொடர்பான தரவுகளை அவர் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு அரசாங்கமும் அதற்கான சில சாதனைகளைப் படைக்கும், மோடி அரசும் அப்படித்தான். சில இடங்களில் மோடி அரசு நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள்தான் காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'இந்தியாவில் என்ன நடக்கிறது' - தாயகம் திரும்பிய பிரதமர் மோடி கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.