ETV Bharat / bharat

ஆழ்கடலில் தூய்மை பணி - 8 வயது சிறுமி அசத்தல் - deep sea cleaning work

புதுச்சேரியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆழ்கடலுக்கு சென்று பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ஆழ்கடலில் தூய்மை பணி - 8 வயது சிறுமி அசத்தல்

author img

By

Published : Jul 29, 2021, 8:09 AM IST

புதுச்சேரி: ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் சென்னை மற்றும் புதுச்சேரியில் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். உரிய பயிற்சி கொடுத்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளையும், நீச்சல் வீரர்களையும் ஆழ்கடலுக்குள் அழைத்து செல்கிறார்.

20 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வரும் அரவிந்த், கடல் தூய்மை, கரோனா, யோகா, உடல் ஆரோக்கியம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

விழிப்புணர்வு குறும்படம்

அவரது 8 வயது மகள் தாரகை ஆரண்ணா. கடல் மற்றும் அதன் தூய்மையை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவரே ஆழ்கடலுக்குச் சென்று தூய்மை பணி செய்கிறார்.

ஆழ்கடலில் தூய்மை பணி - 8 வயது சிறுமி அசத்தல்

இதனை ஒரு குறும்படமாக எடுத்த அவரது தந்தை அரவிந்த் உலக இயற்கை பாதுகாப்பு நாளான நேற்று (ஜூலை 28) வெளியிட்டார். சமூக வலைதளத்தில் இந்த குறும்படம் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

கடல் தூய்மையின் முக்கியதுவம்

ஆழ்கடல் வீரர்களுக்கு தந்தை நீச்சல் பயிற்சி கொடுக்கும்போது உடனிருந்து கவனித்து வந்த சிறுமி தாரகை, பிளாஸ்டிக் கழிவுகள், வலைகள், முகக் கவசங்கள், குப்பைகளால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்தார்.

கடல் தூய்மையின் முக்கியதுவத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் முறையான பயிற்சி பெற்று கடலுக்குள் சென்று பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணி செய்து வருகிறார்.

சிறுவயதிலேயே சமூகத்தின் மீதான சிறுமியின் அக்கறை அனைவருக்கும் ஒரு பாடம்.

இதையும் படிங்க: சர்வதேச புலிகள் தினம் - வளமான காடுகளை உருவாக்கும் புலிகளை காப்போம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.