டெல்லி: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மேற்கு வங்கத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை இன்று (நவ.1) விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்து, பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கியது.
பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்த தடை விதிக்க முடியாது. போலியான பசுமை பட்டாசுகளை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற தடை உத்தரவுக்கு முன்னதாக, மேற்கு வங்க அரசு குறிப்பிட்ட நேரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்திருந்தது குறிப்பிட்டதக்கது.
இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம் செல்லும் அரசு!