ETV Bharat / bharat

'கிழக்கிந்திய கம்பெனியைப்போல மத்திய அரசு செயல்படுகிறது' - சஞ்சய் ரவுத் தாக்கு

author img

By

Published : Nov 28, 2020, 4:32 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்சி செய்துவரும் சிவசேனா அரசுக்கு மத்திய பாஜக அரசு தரும் அரசியல் அழுத்தங்களை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என அக்கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

Sanjay Raut says Shiv Sena not scared of Centre's 'pressure politics'
“கிழக்கிந்திய கம்பெனியைப் போல மத்திய அரசு செயல்படுகிறது” - சஞ்சய் ரவுத் தாக்கு

இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய அவர், “ மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநில அரசுகள் மீது மத்திய அரசு தொடர்ந்து அழுத்தங்கள் தந்துகொண்டே இருக்கின்றது. எங்களின் மாநில உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அதற்காக அரசியல் அழுத்தங்கள் தொடருமானால், அதனை நாங்கள் மனதார வரவேற்கிறோம். எங்கள் மீதான மத்திய அரசின் பழிவாங்கல் அரசியல் தொடர்கிறது. அதனைத் துணிந்து எதிர்கொள்வோம்.

இத்தகைய தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மத்திய அரசு அழுத்தம் அரசியலைச் செய்ய முயற்சிக்கிறது, ஆனால் அது மகாராஷ்டிராவில் பெரிதும் பாதிக்காது, மத்திய நிறுவனங்களின் நகர்வுகளை நாங்கள் அமைதியாக கவனித்துவருகிறோம். நாங்கள் மிரட்டப்படுவதில்லை.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தின் மீது எப்போதும் அழுத்தம் அரசியல் இருக்கும். நாங்கள் தொடர்ந்து போராடுவோம். யாராவது அழுத்தம் அரசியல் செய்ய விரும்பினால், நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். எங்களுக்கு எங்கள் மாநில மக்களின் நலனே முதன்மையான விஷயம். அதற்காக வெளிப்படையான அரசியல் செய்ய விரும்புகிறோம்.

ஆனால், மத்திய அரசோ அமலாக்க இயக்குநரகம் (இ.டி), சிபிஐ போன்ற விசாரணை முகமைகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது. அரசியல் சாசனத்திற்கு எதிராகச் செயல்படவைக்கிறது. மத்திய அரசின் விசாரணை நிறுவனங்களைப் பயன்படுத்தி எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது.

Sanjay Raut says Shiv Sena not scared of Centre's 'pressure politics'
கிழக்கிந்திய கம்பெனியைப் போல மத்திய அரசு செயல்படுகிறது - சஞ்சய் ரவுத் தாக்கு

மத்திய அரசுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது? மக்கள் அரசை அச்சுறுத்துவது, நசுக்குவது, அடக்குவது, ஒடுக்கவது என்ற கிழக்கிந்திய கம்பெனியின் தந்திரோபாயங்களைத் தான் மத்திய அரசு பின்பற்றுகிறது.

அமலாக்க இயக்குநரகம் (இடி), சிபிஐ, வருமானவரித் துறை போன்றவற்றை வேட்டை நாய்களாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என நான் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கார்ட்டூனை இப்போதும் 100% ஆதரிக்கிறேன், அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை.

நாட்டு மக்கள் என்ன உணர்கிறார்களோ அதனையே எனது பதிவும் பிரதிபலித்தது. ஒரு காலத்தில் பாராட்டப்பட்ட இந்த மரியாதைக்குரிய நிறுவனங்கள் இப்போது எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.

இதையும் படிங்க : பாதுகாப்பு படையினர், நக்சலைட் இடையே துப்பாக்கிச் சூடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.