புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழாவையொட்டி புதுச்சேரி கடற்கரையில் புதுச்சேரி பாய்மரப்படகு சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் பாய்மரப்படகுகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த அணிவகுப்பில் 9 வயது முதல் 63 வயது வரை உள்ளவர்கள் 10 படகுகளில் பயணித்தனர். புதுச்சேரி காந்தி திடலில் பின்புறம் உள்ள கடலில் நடத்தப்பட்ட இந்தப் பாய்மரப்படகு அணிவகுப்பு மற்றும் புதுச்சேரி மக்களை வெகுவாக உற்சாகப்படுத்தியது.
மேலும், புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாவினரை பாய்மரப்படகு அணிவகுப்பு வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் புதுச்சேரி பிரான்ஸ் துணை தூதர் லிசே தபோத் பரே மற்றும் புதுச்சேரி மாநில அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் பங்கேற்கேற்ற பாய்மர படகு அணிவகுப்பை தொடங்கி வைத்தனர்.
பாய்மரப்படகு அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனைக் கடற்கரையில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: காயம்பட்ட கடல் ஆமைகள் - 2 ஆண்டுகளுக்கு பின் கடலில் விடுவிப்பு