ETV Bharat / bharat

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகவே கோதுமை விலை உயர்வு - இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் - தமிழ்நாட்டில் கோதுமை விலை

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகவே கோதுமை விலை உயர்ந்துள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

russia-ukraine-war-price-of-wheat-rajya-sabha

author img

By

Published : Aug 5, 2022, 3:45 PM IST

டெல்லி: மாநிலங்களவையில் கோதுமை விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன், "கோதுமை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிலவிவருகிறது. இதனால் உலக சந்தையில் கோதுமை வரத்து குறைந்துள்ளது.

பல நாடுகள் அதிக விலை கொடுத்து கோதுமையை இறக்குமதி வருகிறது. இதனடிப்படையிலேயே கோதுமையின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்திய உணவுக் கழகத்தில், நாட்டு மக்களுக்கு தேவையான அளவு கோதுமை இருப்பு உள்ளது" எனத் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதி நாடான யுக்ரைனில் பல மில்லியன் கணக்கான டன் கோதுமை போர் காரணமாக ஏற்றுமதி செய்யமுடியாமல் கிடங்குகளில் கிடக்கிறது. இதனால் மற்ற நாடுகள் கோதுமையை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்ய திட்டமிட்டன. ஆனால், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின்படி, உணவு தானியங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், மத்திய அரசு ஏற்றுமதியில் கவனம் செலுத்தாமல், மக்களுக்கு மானிய விலையில் கொடுக்க கோதுமையை கையிருப்பு வைத்துள்ளது.

இதையும் படிங்க: எம்பிக்கள் அமலாக்கத்துறை சம்மன்களை தவிர்க்க முடியாது - வெங்கையா நாயுடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.