ETV Bharat / bharat

மோகன் பகவத் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Apr 10, 2021, 7:57 AM IST

Updated : Apr 10, 2021, 9:54 AM IST

கரோனா பாதிப்பு காரணமாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

இந்தியாவில் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது.

தற்போது, பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், திரைப் பிரபலங்களுக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுவருகிறது.

RSS
ஆர்எஸ்எஸ் ட்விட்டர் பதிவு

அந்த வரிசையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்துக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர், சிகிச்சைக்காக நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் மோகன் பகவத்
மருத்துவமனையில் மோகன் பகவத்

இவர், கடந்த மார்ச் ஏழாம் தேதி, நாக்பூரின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை (டோஸ்) செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கரோனா

Last Updated : Apr 10, 2021, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.