இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதுள்ள இளம் வீரர்களில் அதிரடி ஆட்டத்துக்குப் பெயர் பெற்றவர் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட். இவர் கடந்த டிசம்பர் மாதம் டெல்லியிலிருந்து உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது.
விபத்துக்கு பிறகு உடனே தீப்பிடித்து எரிந்த காரிலிருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு ரிஷப் பண்ட் வெளியேறினார். இந்த விபத்தில் பண்டுக்குத் தலை, முதுகு, கால் என உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பகுதியிலிருந்த பொதுமக்களும் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பண்ட் தற்போது குணமாகி வருகிறார். இந்நிலையில் ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் ”one step forward, one step stronger, one step better" என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ரிஷப் பண்ட் இன்னும் சில காலம் ஓய்வில் இருப்பார் எனக் கூறப்படுகிறது.
-
One step forward
— Rishabh Pant (@RishabhPant17) February 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
One step stronger
One step better pic.twitter.com/uMiIfd7ap5
">One step forward
— Rishabh Pant (@RishabhPant17) February 10, 2023
One step stronger
One step better pic.twitter.com/uMiIfd7ap5One step forward
— Rishabh Pant (@RishabhPant17) February 10, 2023
One step stronger
One step better pic.twitter.com/uMiIfd7ap5
முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ரிஷப் பண்ட் விரைவில் குணமாகி இந்திய அணிக்காக விளையாட வேண்டும் எனப் பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ரிஷப் பண்ட் 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா வென்றதில் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி; சாதனை படைத்த அஸ்வின்