ETV Bharat / bharat

உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு பிஎச்டி கட்டாயமில்லை... யுஜிசி அதிரடி அறிவிப்பு!

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்ற முனைவர் பட்டம் கட்டாயம் இல்லை என்றும் முதுகலை படிப்புடன், தேசிய தகுதித் தேர்வான நெட் (NET), மாநில தகுதித் தேர்வு செட் (SET), மாநில அளவிலான தகுதித் தேர்வு ஸ்லெட் (SLET) ஆகிய ஏதாவது ஒரு தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் என பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி அறிவித்து உள்ளது.

author img

By

Published : Jul 5, 2023, 8:19 PM IST

UGC
UGC

டெல்லி : உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி நியமனம் செய்ய பிஎச்டி என்ற முனைவர் பட்டம் தகுதி கட்டாயம் இல்லை என பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி அறிவித்து உள்ளது.

  • UGC Gazette Notification:

    Ph.D. qualification for appointment as an Assistant Professor would be optional from 01 July 2023.

    NET/SET/SLET shall be the minimum criteria for the direct recruitment to the post of Assistant Professor for all Higher Education Institutions. pic.twitter.com/dnpHlnfgo2

    — UGC INDIA (@ugc_india) July 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிய முதுகலை படிப்புடன், பிஎச்எடி எனப்படும் முனைவர் படிப்பும் கட்டாயம் என பல்கலைக்கழக மனியக் குழுவான யுஜிசி அறிவித்து இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு உதவிப் பேராசிரியராக பணி நியமனம் செய்ய முனைவர் படிப்பு கட்டாயம் என்று யுஜிசி அறிவித்தது.

ஏற்கெனவே முனைவர் படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு 3 ஆண்டு கால அவகாசம் வழங்கி பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டது. இந்நிலையில், உதவி பேராசிரியராக பணியாற்ற முதுகலை படிப்புடன், தேசிய தகுதித் தேர்வான நெட் (NET), மாநில தகுதித் தேர்வு செட் (SET), மாநில அளவிலான தகுதித் தேர்வு ஸ்லெட் (SLET) ஆகிய ஏதாவது ஒரு தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று தெரிவித்து உள்ள பல்கலைக்கழக மானியக் குழு, அதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த திருத்தப்பட்ட உத்தரவு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்து உள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம். ஜெகதீஷ் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில், ஜூலை 1 முதல் உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் பிஎச்டி விருப்பமாக மட்டுமே இருக்கும் என்றும் NET/SET/SLET தேர்வுகள் உதவிப் பேராசிரியராக தேர்வாவதற்கு குறைந்தபட்ச மட்டும் கட்டாயத் தகுதியாக இருக்கும் என்றும் பதிவிட்டு உள்ளார்.

கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டு முதல், உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர முனைவர் படிப்பு கட்டாயம் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் பல கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதன் காரணமாக உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான பணி நியமனத்தில் முனைவர் பட்டம் தகுதி கட்டாயம் என்ற உத்தரவில் பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி திருத்தம் செய்து அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அடுத்த டார்கெட் முதலமைச்சர்... அஜித் பவார் ஓபன் டாக்... சரத் பவார் ஓய்வு பெற அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.