நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தற்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்றைய வர்த்தக நாள் தொடக்கத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்ந்ததையடுத்து, நிறுவனத்தின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு ரூ.14.04 லட்சம் கோடி என்ற மதிப்பை எட்டியது.
இதையடுத்து, இந்தியாவில் ரூ.14.04 லட்சம் கோடி மதிப்பை எட்டிய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் முக்கிய அங்கங்களான ஜியோ, சில்லறை வர்த்தகம், எண்ணெய்-ரசாயன உற்பத்தி வணிகம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டுவருவதால், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பானது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது. நாட்டின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிதான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜூன் 1 முதல் இவர்களுக்கு ஜிமெயில் சேவைகள் கிடையாது: கூகுள் அதிரடி