ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகேயுள்ள கான்கே என்ற பகுதியில் சுலேகா கத்தூன் (40) என்பவர் தனது கணவர் மின்ஹாஜ் அன்சாரி என்பவருடன் வசித்துவந்தார்.
கணவன்-மனைவி சண்டை: இந்த நிலையில் நேற்று (மே7) இரவு கத்தூனுக்கும், அன்சாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சுலேகா கத்தூன் கட்டிலில் அசந்து தூங்கிவிட, தக்க நேரத்திற்காக காத்திருந்த அன்சாரி, மனைவி என்றும் பாராமல் வாளால் சுலேகாவின் கழுத்தை துண்டாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.
இந்தச் சம்பவம் அதிகாலையில்தான் அக்கம் பக்கத்தில் இருந்த நபர்களுக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து அவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின்பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த காவலர்கள் சுலேகா கத்தூன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
வாக்குமூலம்: மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அன்சாரியையும் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், “தன் மனைவி தன்னை தொடர்ந்து அவமதித்து வந்தார். உரிய மரியாதை கொடுக்கவில்லை. அதனால் கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்ஹாஜ் அன்சாரி, சுலேகா கத்தூன் தம்பதியருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அந்த இரு குழந்தைகளும், அன்னையர் தினமான இன்று அநாதையாகியுள்ளனர்.
இதையும் படிங்க: பணத்திற்காக தம்பதியை கொன்று பண்ணை வீட்டில் புதைத்த நேபாள கார் ஓட்டுநர்!