ETV Bharat / bharat

ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு "ஈட் ரைட் கேம்பஸ்" விருது - FSSAI அங்கீகாரம்! - உயர்தர சுகாதாரமாக உணவு வழங்கல்

உணவுப் பாதுகாப்பில் உயர்மட்டத் தரத்தைப் பராமரித்து வருவதற்காக, ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு "ஈட் ரைட் கேம்பஸ் விருது"-ஐ மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழங்கியுள்ளது.

Ramoji
Ramoji
author img

By

Published : Dec 22, 2022, 5:35 PM IST

ஹைதராபாத்: நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும், நாட்டின் உணவுப் பாதுகாப்பின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், "தி ஈட் ரைட்" என்ற இயக்கத்தை, மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. நாட்டில் உயர்தரத்தில் சுகாதாரமாக உணவு வழங்கி வரும் அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்களுக்கு "தி ஈட் ரைட்(The Eat Right)" இயக்கம் மூலம் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ வளாகமான ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு "ஈட் ரைட் கேம்பஸ் விருது (Eat Right Campus Award)"-ஐ மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழங்கியுள்ளது. ராமோஜி ஃபிலிம் சிட்டி, அதன் உணவுப் பாதுகாப்பில் உயர்மட்டத் தரத்தைப் பராமரித்து வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டி, 1,666 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த திரைப்பட நகரமாகவும், இந்தியாவில் விடுமுறையைக் கழிக்க, தீம் அடிப்படையிலான சிறந்த சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது.

இதில் நட்சத்திர உணவகங்கள் உள்பட 15 உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்கள் அனைத்தும், மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டது. இதில் உணவுப் பாதுகாப்பு தரத்தை சிறப்பாக பராமரித்தது தெரியவந்தது. இதையடுத்து ராமோஜி பிலிம் சிட்டிக்கு, 'ஈட் ரைட் கேம்பஸ் (Eat Right Campus)' அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிறந்த விருந்தோம்பலுக்காக 'ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு' சிஹாரா விருது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.