ETV Bharat / bharat

ராமரின் பெயரில் கடன் - முன்னாள் பிரதமர் முதல் பாலிவுட் நடிகர் வரை வாடிக்கையாளர்களை கொண்ட விசித்திர வங்கி!

வாரணாசியில் உள்ள ஒரு வங்கி ராமரின் பெயரில் கடன் தருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அப்படி கடன் கேட்டு வருபவர்களிடம் அந்த வங்கி பணத்திற்கு பதிலாக வெறும் காகிதங்களை வழங்கி ட்விஸ்ட் கொடுக்கிறது. நூற்றாண்டை நெருங்கும் அந்த வங்கி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

Etv bharat
Etv bharat
author img

By

Published : Mar 31, 2023, 7:20 AM IST

வாரணாசி : உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா வரும் உள்நாடு முதல் வெளிநாட்டு பக்தர்களுக்கு மிகவும் பரீட்சயமான வங்கி ராம் ராம்பாதி வங்கி. இந்த வங்கியில் எந்த ஆவணங்களும் இன்றி ராமரின் பெயரில் பொது மக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

அதேநேரம், பணத்திற்கு பதிலாக கட்டுக் கட்டாக வெள்ளைத் தாள்களும், சிவப்பு நிற மையும் கடனாக வழங்கப்படுகின்றன. காண்போரை குழப்பத்திற்கு உள்ளாக்கும் வகையில் இந்த வங்கியின் நடவடிக்கைகள் இருப்பது போல் எண்ணிலால் உண்மை தான். இது ஒரு ஆன்மீக வங்கி என கூறப்படுகிறது.

மற்ற சாதாரண வங்கிகளை போல், இந்த ராம் ராம்பாதி வங்கியிலும் மேலாளர், கணக்காளர், ரகசிய லாக்கர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உண்டு. ஆனால் இங்கு பணத்திற்கு பதிலாக பக்தர்களின் வேண்டுதல்கள் சேமிக்கப்படுகின்றன. இந்த வங்கியில் கணக்கு வைக்க விரும்பும் நபர் வழக்கமான வங்கிகளை போல் நேரடியாக வங்கிக்கு சென்று ஊழியர்களை சந்தித்து கணக்கு தொடங்க முடியும்.

கடன் பெற விரும்புவோர்களுக்கு ராமரின் பெயரில் கடன் வழங்கப்படுகின்றன. பணத்திற்கு பதிலாக வெள்ளை காகிதங்களும் சிவப்பு நிற மையும் வழங்கப்படுகின்றன. இந்த காகிதங்களில் வங்கியில் இருந்து வழங்கப்படும் சிவப்பு நிற மையை கொண்டு ராமரின் பெயரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் முறை எழுத வேண்டும்.

சாதாரண வங்கிகளில் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டியது போல் இந்த வங்கியில் கடன் வாங்வ்கிய 8 மாதம் 10 நாட்களில் அந்த காகிதங்களை திருப்பிச் செலுத்த வேண்டும். அப்படி கொடுக்கப்படும் வாடிக்கையாளர்களின் காகிதங்கள் பாதுகாக்கப்படும். முற்றிலும் வித்தியாசமான நடைமுறைகளை கொண்டு இயங்கும் இந்த வங்கியில் கோடிக்கணக்கான மக்கள் கணக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 96 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த வங்கி குறித்து கூறுகிறார் அதன் மேலாளர் சுமித் மெகரொத்ரா, "எனது கொள்ளுத் தாத்தா தாஅஸ் சன்னு லால் கடந்த 1926 ஆண்டு இந்த வங்கியை துவங்கினார். சாதாரண வங்கிகளை போல் மேலாளர், கணக்காளர் உள்ளிட்ட இயக்க முறை நடைமுறைகளை பின் பற்றியும், அதேநேரம் சாதாரண வங்கிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் 19 பில்லியன் 42 கோடி 34 லட்சத்து 25 ஆயிரம் ராம் பெயரை கையால் எழுதப்பட்ட தாள்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. ராம நவமியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வங்கிக்கு வந்து செல்கின்றனர். இங்கு கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு காகிதம், மரத்தால் செய்யப்பட்ட பேனா மற்றும் சிவப்பு நிற மை வழங்கப்படுகின்றன.

நாள்தோறும் காலை 4 மணி முதல் 7 மணி வரை என ஒரு லட்சத்து 25 ஆயிரம் ராமரின் பெயரை 8 மாதம் 10 நாட்களுக்கு எழுதி முடித்து மீண்டும் இங்கு வந்த ஒப்படைக்க வேண்டும் என்பதே பக்தர்களுக்கு சவாலாக வழங்கப்படுகிறது. இந்த சவாலில் ஈடுபடும் பக்தர்கள் 8 மாதம் 10 நாட்களுக்கு அசைவம் உண்ணக் கூடாது. வெங்காயம், பூண்டு சேர்த்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்ற விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் தாயார், பாலிவுட் நடிகர் சத்ருஹான் சின்காவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த வங்கியில் கடன் பெற்று உள்ளனர். வங்கி தொடங்கி 96 ஆண்டுகள் ஆன நிலையில், விரைவில் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டு உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : குஜராத்தில் ஸ்ரீராம நவமி பேரணியில் கல்வீச்சு... பக்தர்கள் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.