ETV Bharat / bharat

தீயணைப்பு, பாதுகாப்புப் பயிற்சிக்கான திறன் மேம்பாட்டு மையம் தொடங்கிவைப்பு

author img

By

Published : Feb 23, 2021, 1:51 PM IST

தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பயிற்சிக்கான திறன் மேம்பாட்டு மையத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கிவைத்தார்.

Rajnath Singh inaugurates DRDO skill centre for fire safety training
தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சிக்கான திறன் மேம்பாட்டு மையத்தை தொடங்கிவைத்த ராஜ்நாத் சிங்

டெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம், பில்குவாவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில், தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பயிற்சிக்கான திறன் மேம்பாட்டு மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (பிப். 22) தொடங்கிவைத்தார்.

விலைமதிப்பற்ற மனித உயிர்களையும், மதிப்புமிக்க பொருள்களையும் பாதுகாக்க பயிற்சிபெற்ற மனிதவளங்களை உருவாக்குவதும், தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுமே இந்தத் திறன் மேம்பாட்டு மையத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

  • Glad to inaugurate the @DRDO_India Skill Development Centre created by the Centre for Fire, Explosive and Environment Safety (CFEES).

    The Centre is aimed at developing trained human resources, fire safety technology and products to save precious human lives and valued assets. pic.twitter.com/ZFhBwv0J8l

    — Rajnath Singh (@rajnathsingh) February 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தத் திறன் மேம்பாட்டு மையம், தரமான பயிற்சியை வழங்கி தீ விபத்துகளில் நேரும் உயிரிழப்புகள், பொருள்சேதங்களைத் தடுக்கும்வகையில் சிறப்பாகச் செயலாற்றி முன்னேறிச் செல்ல வேண்டும் என தனது வாழ்த்துகளை ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தலின் போது மத்திய காவல் படை அனுப்புவது வழக்கம் - இந்திய தேர்தல் ஆணையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.