ETV Bharat / bharat

Jailer Piracy video leak: இணையத்தில் கசிந்த ஜெயிலர் படத்தின் ’HD Print’... படக்குழு அதிர்ச்சி!! - சிவராஜ் குமார்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் ஹெச்டி ப்ரிண்ட் (HD Print) இணையதளத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 12:46 PM IST

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சிவராஜ் குமார், மோகன்லால், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பலர் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தனர். முன்னதாக ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் விஜய்யை தாக்கி பேசியதாக சமூகவலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்தை விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது முதல் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. இரண்டு காட்சிகளில் சிவராஜ் குமார் தோன்றினாலும் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இன்று வரை ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் ஹெச்டி ப்ரிண்ட் (HD Print) இளையதளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் வெளியாவதற்கு முன்பாகவே ஜெயிலர் படத்தின் ப்ரிண்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் படத்தின் லிங்கை பகிர வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

  • I request fans to not share any form of HD content of #Jailer movie on social media and let people enjoy it in theatres as it is meant to be. Let's not support piracy at any cost.

    — Rhevanth Charan (@rhevanth95) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தியேட்டர்களில் ஜெயிலர் திரைப்படம் மூலம் இன்றளவும் உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வரும் நிலையில், ஜெயிலர் ஹெச்டி ப்ரிண்டை பகிர வேண்டாம் என நெட்டிசன்களுக்கு சென்னை ரோகிணி தியேட்டர் நிர்வாக இயக்குனர் ரேவந்த் சரண் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார்.

ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே. ஞானவேல் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், ஷர்வானந்த், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க: Thalapathy 68: அமெரிக்கா பறந்தார் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.