ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அனுமன்கர் போலீசார் கூறுகையில், இந்த விபத்து பிசராசர் அருகேயுள்ள நெடுஞ்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்டுள்ளது.
பள்ளுவில் இருந்து சர்தார் பகுதியை நோக்கி செங்கல் லோடு ஏற்றி சென்றுகொண்டிருந்த லாரி நள்ளிரவில் எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதியது. இதையடுத்து லாரியின் ஓட்டுநர் தப்பியோடினார். இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். தப்பியோடிய ஓட்டுநரை தீவிரமாக தேடிவருகிறோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்