ETV Bharat / bharat

ராகுல் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்! - சூரத்

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 24) நீதிமன்றத்தில் ஆஜராகிறார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

DEFAMATION CASE
DEFAMATION CASE
author img

By

Published : Jun 23, 2021, 7:40 PM IST

Updated : Jun 24, 2021, 7:39 AM IST

காந்திநகர் (குஜராத்): 2019 மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் வரிசையில் நரேந்திர மோடி' என்றார்.

இந்த விமர்சனம் சாதி ரீதியாக இருப்பதாகக் கூறி மோடி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ பர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஏஎன் தவே, அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அளித்தார். இந்த வழக்கு இன்று (ஜூன் 24) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அப்போது, 'ராகுல் காந்தி ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார்' என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்டா, 'இது ஒரு போலியான அவதூறு வழக்கு. வழக்கு விசாரணையின்போது, ராகுல் காந்தி ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை எடுத்துவைப்பார். காலை 10 மணிக்கு வரும் அவர், மதியம் 12.30 மணிக்கு டெல்லி திரும்புவார். அவர் முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் ஆஜராகவே வருகிறார்' என்றார்.

இதையும் படிங்க: 'திமுகவுடன் ஒன்றிணைந்து பாடுபாடுவோம்' - ராகுல்

Last Updated : Jun 24, 2021, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.