ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஃபிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்தில் 58 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், விமானங்களைத் தயாரித்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு 1.1 மில்லியன் யூரோ டாலர்களை அளித்ததாக ஃபிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து முன்னதாகக் கேள்வி எழுப்பிய காங்கிரஸ், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து முழுமையான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல்.06) இது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”ஒருவரது செயல்களின் பேரேடு (ledger) தான் கர்மா. அதிலிருந்து எவரும் தப்ப முடியாது” என ரஃபேல் ஊழல் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ரஃபேல் ஒப்பந்தம் குறித்த திடுக்கிடும் உண்மைகள்? முழுமையான விசாரணை கோரும் காங்கிரஸ்!