ETV Bharat / bharat

அடித்து ஆடும் ராகுல்... மீண்டும் அமர் ஜவான் ஜோதி!

சத்தீஸ்கரில் அமர் ஜவான் ஜோதிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் அடிக்கல் நாட்டினார்.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Feb 3, 2022, 6:32 PM IST

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் புதிதாக அமையவுள்ள அமர் ஜவான் ஜோதி நினைவிடத்துக்கு ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (பிப்.3) அடிக்கல் நாட்டினார். அமர் ஜவான் ஜோதி என்னும் நித்தியச் சுடர் போரில் உயிரிழந்த இந்திய வீரர்கள் நினைவாக ஏற்றப்பட்ட அணையா விளக்கு ஆகும்.

இந்த தொடக்க விழாவில் பேசிய மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், “டெல்லி இந்தியா கேட்டில் அமைந்திருந்த அமர் ஜவான் ஜோதி மாற்றப்பட்டது எனக்கு மயக்கத்தை கொடுத்தது” என்றார்.

இது குறித்து மாநில அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இங்குள்ள மானாவில் உள்ள 'சாய்தி வாஹினி சத்தீஸ்கர் ஆயுதப்படை' வளாகத்தில் நித்திய சுடர் ஏற்றப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் பழுப்பு நிற பளிங்கு கற்களால் ஆன சுவர் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு நினைவுக் கோபுரமும், பிறைவடிவ சுவரும் இருக்கும். மேலும், நினைவுக் கோபுரத்தின் முன் அடிவாரத்தில் முத்திரை வடிவில் துப்பாக்கி மற்றும் தலைக்கவசம் வைக்கப்படும்.

சத்தீஸ்கர் அமர் ஜவான் ஜோதி இந்த சின்னத்தின் முன் 24 மணி நேரமும் ஒளி வீசி எரியும். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார். தொடர்ந்து, ராகுல் காந்தி ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி ஒன்றுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதையும் படிங்க : இந்தியா கேட் அமர் ஜவான் ஜோதி- மத்திய அரசு விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.