ETV Bharat / bharat

பிரதமர் மோடி, அதானியை பிக்பாக்கெட்டுகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி விமர்சனம்! - பிக்பாக்கெட் பிரதமர் மோடி அதானி ராகுல் காந்தி

ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, தொழிலதிபர் கவுதம் அதானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பிக்பாக்கெட்டுகளுடன் ராகுல் காந்தி ஒப்பிட்டு விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 10:26 PM IST

பரத்பூர் : ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைக்கு வரும் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாறிமாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (நவ. 22) பரத்பூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பிக்பாக்கெட்டுகள் எப்போதும் தனியாக வருவதில்லை என்றும் அவர்கள் எப்போதும் குழுவாக வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ஒருவர் பாதிக்கப்பட்டவரின் கவனத்தை திசை திருப்பும்போது, மற்றொருவர் பின்னாலில் இருந்து பாக்கெட்டை வெட்டி விடுவார் என்று தெரிவித்தார். மக்களின் கவனத்தை திசை திருப்ப தொலைகாட்சியில் பிரதமர் மோடி முன்பக்கத்தில் வருகிறார் என்றும் அதானி பின்னால் வந்து மக்கள் பணத்தை எடுக்கிறார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

பிக்பாக்கெட்டுகள் தனியாக வருவதில்லை என்றும் அப்படி அவர் தனியாக வந்தால் உங்கள் பாக்கெட்டை வெட்ட முடியாது என்று கூறினார். மூன்று பேர் கொண்ட குழுவாகவே அவர் வருவர் என்றும் ஒருவர் முன்பக்கமும், ஒருவர் பின்புறமும், மற்றொருவர் தூரத்திலும் இருந்து கவனத்தைத் திசை திருப்பி பணத்தை கொள்ளையடிப்பர் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான் பிரதமர் மோடியின் வேலை என்றும் அவர் முன் நின்று தொலைக்காட்சியில் தோன்றி இந்து-இஸ்லாமியர்கள் பிரச்சினை, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற விஷயங்களை எழுப்பி பொது மக்களை திசை திருப்புகிறார் என்றார். இதற்கிடையே, அதானி பின்னால் வந்து பணத்தை எடுத்து செல்வதாக ராகுல் காந்தி கூறினார்.

இருவருக்கும் இடையில் யாராவது வருகிறார்களா என தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் அமித் ஷா என்றும் அப்படி வந்தால் அவர்களை தடியடி நடத்தி அடிப்பார் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். முன்னதாக, இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி, அவர் அபசகுனம் பிடித்தவர் என பிரதமர் மோடியை விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு - 4 வீரர்கள் வீரமரணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.