ETV Bharat / bharat

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்! - Rahul demands rollback in prices of fuel

பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிராக காங்கிரஸ் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

Rahul gandhi
Rahul gandhi
author img

By

Published : Mar 31, 2022, 12:40 PM IST

புது டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி விஜய் செளக் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்கள், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

  • Petrol Rate in Indian Rupees (₹)

    Afghanistan: 66.99
    Pakistan: 62.38
    Sri Lanka: 72.96
    Bangladesh: 78.53
    Bhutan: 86.28
    Nepal: 97.05
    India: 101.81

    प्रश्न न पूछो ‘फ़क़ीर’ से, कैमरा पर बाँटे ज्ञान।
    जुमलों से भरा झोला लेकर, लूटे हिंदुस्तान॥#MehangaiMuktBharat

    — Rahul Gandhi (@RahulGandhi) March 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தொடர்ந்து, “கடந்த 9 நாள்களில் மட்டும் 10 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” எனக் கோஷமிட்டனர். காங்கிரஸ் கட்சியின் இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் செளத்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி கூறுகையில், “எங்கள் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்து கட்டுக்குள் வைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் அரசு பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்றார். தொடர்ந்து, “நான் தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று கூறியிருந்தேன்.

மேலும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்-ஐ முழுவதுமாக நிரப்பி வைக்கும்படி கூறியிருந்தேன்” என்றார். முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து ராகுல் காந்தி சமையல் எரிவாயு உருளை மற்றும் பைக் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

  • भाजपा सरकार ने पिछले 10 दिन में 9 बार पेट्रोल-डीज़ल के दाम बढ़ाए गए हैं। इसकी चोट सीधे तौर पर गरीब, मिडिल क्लास पर पड़ती है।

    हमारी माँग है कि भाजपा सरकार बढ़ रहे दामों और महंगाई को नियंत्रित करे: श्री @RahulGandhi pic.twitter.com/4xwKVzO1nY

    — Congress (@INCIndia) March 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மார்ச் 22ஆம் தேதி முதல் இதுவரை 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : ஆண்டுதோறும் தேர்தல் வந்தால் பெட்ரோல்- டீசல் விலை குறையுமா?- திமுக எம்.பி. கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.