ETV Bharat / bharat

Exclusive: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை; பின்னணி என்ன? - காங்கிரஸ்

கடந்தாண்டு காங்கிரஸில் இணைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பல கூட்டங்களில் கலந்துகொண்டார். அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மான்சா போட்டியிட்ட சித்து மூஸ்வாலா, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

Sidhu Moose Wala
Sidhu Moose Wala
author img

By

Published : May 30, 2022, 8:09 PM IST

சண்டிகர்: பஞ்சாப் பாப் பாடகர் சித்து மூஸ்வாலா காரில் சென்றுகொண்டிருந்த போது மே29ஆம் தேதி, அதாவது நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். 28 வயதான சித்து மூஸ்வாலாவின் இயற்பெயர் சுப்தீப் சிங் சித்து. 1993ஆம் ஆண்டு மூஸ்வாலா என்ற கிராமத்தில் பிறந்தார்.

பின்னாள்களில் தனது கிராமத்தின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். தனது சிறு வயதில் இருந்தே சித்து, பாப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். இவரது பல பாடல்கள் சர்ச்சைக்கு பெயர் போனவை. இவரது ஜட்டி ஜியோனே மோர் வார்கி என்ற பாடல் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீக்கிய போர் வீரர் மாய் போக்கோ மீது அவதூறு பரப்புவதாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை; பின்னணி என்ன?

இதையடுத்து சித்து மூஸ்வாலா மன்னிப்பு கோரினார். தொடர்ந்து, ஈஸ்ட் சைட் ப்ளோ மற்றும் இட்ஸ் ஆல் அபோர்ட் யூ உள்ளிட்ட பல்வேறு இசை ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். மேலும் சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரும் அரசியல் பின்னணி கொண்டவர்கள் ஆவார்கள். இவரது தாயார் ஊராட்சி மன்றத் தலைவர் ஆக உள்ளார்.

இந்த நிலையில் கடந்தாண்டு காங்கிரஸில் இணைந்த சித்து மூஸ்வாலா, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பல கூட்டங்களில் கலந்துகொண்டார். அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மான்சா போட்டியிட்ட மூஸ்வாலா, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டிய ஆம் ஆத்மி அரசு ஆட்சியமைத்தது. தொடர்ந்து மூஸ்வாலா உள்ளிட்ட 420 பேருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பாதியாக குறைக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று மூஸ்வாலா சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் இந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பஞ்சாப்பில் மூஸ்வாலா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மூஸ்வாலா ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் மக்கள் அமைதிக் காக்க வேண்டும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், மூஸ்வாலா இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி மீது குற்றஞ்சாட்டியுள்ள பாஜக, பாதுகாப்பை குறைத்துக் கொள்வதுதான் அரசியல் ஸ்டண்ட் ஆக எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

மூஸ்வாலாவின் மரணம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தக் கொலையில் லாரன்ஸ் பிஷ்னு என்பவர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், இவர் கனடாவில் வசிக்கும் பிரபல தாதா கோல்டி பிரார் கேங்- ஐ சேர்ந்தவர் ஆவார். சித்து மூஸ்வாலாவின் மரணத்திற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொலை: பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.