ETV Bharat / bharat

காஷ்மீர்: பயங்கரவாதத் தாக்குதலில் முன்னாள் காவல்துறை அலுவலர் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை

புல்வாமா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் முன்னாள் காவல் துறை அலுவலர் ஃபயஸ் அஹமது மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

3 பேர் சுட்டுக்கொலை
3 பேர் சுட்டுக்கொலை
author img

By

Published : Jun 28, 2021, 12:55 PM IST

Updated : Jun 28, 2021, 1:12 PM IST

ஸ்ரீநகர்(ஜம்மு - காஷ்மீர்): தெற்கு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் நேற்று (ஜூன் 27) நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காவல் துறை அலுவலர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நேற்று 11 மணியளவில் துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள், முன்னாள் காவல் துறை அலுவலர் ஃபயஸ் அஹமதுவின் இல்லத்திற்குள் நுழைந்து சுடத்தொடங்கினர். இச்சம்பவத்தில் ஃபயஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியும் மகளும் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்' என உயர் காவல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, மூவரும் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஃபயஸ்ஸினை சிகிச்சைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

  • #Terrorists barged into the house of SPO Fayaz Ahmad of Hariparigam Awantipora & fired #indiscriminately. In this #terror incident, he along with his wife & daughter recieved #critical gunshot injuries. Fayaz Ahmad #succumbed to his injuries. Area cordoned off. Search going on.

    — Kashmir Zone Police (@KashmirPolice) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

படுகாயங்களுடன் இருந்த அவரது மனைவியும் மகளும் ஆனந்த் நாக் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காஷ்மீர்: பயங்கரவாதத் தாக்குதலில் முன்னாள் காவல்துறை அலுவலர் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை

இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக, ஃபயஸின் மனைவி ராஜா பனோ(48), அவரது மகள் ரஃபியா ஜன்(25) இருவரும் ஸ்ரீநகருக்கு அனுப்பப்பட்டனர்.

மூவர் உயிரிழப்பு

ராஜா பனோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில மணி நேரத்திலும், அவரது மகள் ரஃபியா ஜன் இன்று(ஜூன் 28) அதிகாலை 4 மணிக்கும் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் குறித்து ஜம்முவின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லாவும், மெகபூபா முப்தியும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் 46 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

Last Updated : Jun 28, 2021, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.