புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் மார்ச் இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஆனால் பல்வேறு நிர்வாக காரணங்களால் கடந்த 50 ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது ஓரிரு மாதங்கள் கழித்து முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது.
இதனிடையே த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது ஜனாதிபதி ஆட்சி அமலானது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வரும் புதிய அரசு தாக்கல் செய்யும் என அறிவிக்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படாததால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்படும் என கருதப்பட்டது.
இந்நலையில், முதலமைச்சர் ரங்கசாமி அனைத்து அமைச்சர்களுடன் நேற்று (ஜூலை 5) ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். அதில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒன்றின் அரசின் அனுமதியைப் பெறுவது, அதற்குள் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் ஒப்புதலுடன் ரூபாய் 9250 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி கேட்டு ஒன்றிய அரசுக்கு கோப்பு அனுப்பி வைத்துள்ளார். அனுமதி கிடைத்ததும் ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடிக்கு மாங்கனிகள் அனுப்பிய வங்கதேச பிரதமர்!