ETV Bharat / bharat

புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் - பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து ரங்கசாமி ஆதரவு எம்.எல்.ஏ. தர்ணா! - பட்ஜெட் கூட்டத்தொடர்

ஆளுநர் தமிழிசை விளம்பர அரசியல் செய்வதாகவும், புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் வேண்டும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு சட்டப்பேரவையை விட்டு திடீர் வெளிநடப்பு செய்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 9, 2023, 10:25 PM IST

புதுச்சேரி: 2023 - 24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. கூட்டத் தொடரில் உரையாற்ற வருகை புரிந்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

ஆளுநர் தமிழிசை விளம்பர அரசியல் செய்கிறார் - சுயேட்சை எம்.எல்.ஏ நேரு

இதனையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்ற வந்த துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சபாநாயகர் செல்வம் சட்டசபை மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். இதனை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்துடன் சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.

பாரதியாரின் வரிகளை வாசித்து ஆளுநர் தமிழிசை உரையை வாசித்தார். அப்போது பேரவையில் இருந்த முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவு சயேட்சை எம்.எல்.ஏ நேரு, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான போஸ்டரும் திடீரென எழுந்து நின்றார். அந்த போஸ்டரில் "மத்திய அரசே, மத்திய அரசே, வேண்டாம் வேண்டாம் புதுச்சேரிக்கு இரவல் ஆளுநர் வேண்டாம்" என எழுதப்பட்டு இருந்தது.

சட்டமன்ற உறுப்பினர் நேருவை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் செல்வம் கூறினார். எதற்கும் சட்டை செய்யாமல் போஸ்டருடன் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நின்ற சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, திடீரென சட்டப் பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, "புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக உள்ள தமிழிசை எப்போது புதுச்சேரி வருகிறார், எப்போது போகிறார் என்று தெரியவில்லை. மக்கள் தேவைப்படும் நேரத்தில் அவரை சந்திக்க முடியவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

"ஆளுநர் மாளிகையில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்துகிறார். இதுவரை எந்த குறையை அவர் நிவர்த்தி செய்து இருக்கிறார் என்று மாநிலம் முழுவதும் ஆய்வு செய்வதாக கூறினார். துணை நிலை ஆளுநர் தமிழிசை இதுவரை என்னென்ன குறைகளை சரி செய்து உள்ளார் என்ற கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் நேரு, ஆளுநர் தமிழிசை விளம்பர அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.

பேருந்து நிலையத்தில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லை, சுற்றுலா மாநிலமாக உள்ள புதுச்சேரியில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. தற்போது 13 மாநிலங்களுக்கு ஆளுநர் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்து உள்ளது, இது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று கூறிய அவர், எனவே புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி சட்டப் பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் . ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு அறிவுறுத்தலின் படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான அரசு திட்டமிட்டது.

இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை தலைமையில் அண்மையில் கூடியது. திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக 11,600 கோடி ரூபாய் நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட 1,000 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி மார்ச் 9 ஆம் தேதி காலை 9.45 மணிக்கு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் தமிழிசை உரையாற்ற ராஜ்நிவாஸிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவைக்கு வந்தார். முன்னதாக ஆளுநர் தமிழிசைக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: தொடங்கியது சென்னை - புதுச்சேரி இடையேயான தனியார் சரக்குக் கப்பல் போக்குவரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.