ETV Bharat / bharat

அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை வழிபட்ட புதுச்சேரி முதலமைச்சர்! - ananthamangalam anjaneyar kovil news

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி முதலமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.

அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை வழிப்பட்ட புதுச்சேரி முதலமைச்சர்!

author img

By

Published : Dec 15, 2020, 2:10 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அருள்மிகு திருநேத்திர தச புஜ வீர ஆஞ்சநேய சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். இந்தக் கோயிலில் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட்டால் சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் ஆஞ்சநேயர் சுவாமியின் மூல நட்சத்திர தினமான இன்று (டிச. 15) காலை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆஞ்சநேய சுவாமிக்கு 150 லிட்டர் பால் தயிர் திரவிய பொடிகளைக் கொண்டு திருமுழுக்கு செய்து வழிபாடு நடத்தினார்.

அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை வழிபட்ட புதுச்சேரி முதலமைச்சர்!

முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் புதுச்சேரி முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ஆஞ்சநேயர் மூலவர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் அவரது மகன் சோமசுந்தரம், மருமகள், உறவினர்கள் வந்திருந்தனர். புதுச்சேரி முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க...சென்னை ஐஐடியில் மேலும் 79 பேருக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.