ETV Bharat / bharat

பாஜக கூட்டணியிலிருந்து புதுச்சேரி முதலமைச்சர் வெளியேற வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் - முதலமைச்சர் ரங்கசாமி

பாஜக கூட்டணியிலிருந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியேற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியிலிருந்து முதலமைச்சர் ரங்கசாமி வெளியேற வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்

author img

By

Published : Sep 20, 2022, 10:32 PM IST

முதலமைச்சர் ரங்கசாமியின் பேச்சை பாஜக அமைச்சர்கள், மத்திய அரசு கேட்கவில்லையென்றால் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து ஆளும் முதலமைச்சர் ரங்கசாமி வெளியேறி மாற்றுக்கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைத்து வரும் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென் மாநிலங்களுக்கான கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்துகொண்ட நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் மட்டும் இதைப் புறக்கணித்து உள்ளார்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இந்த ஆட்சி கடந்துள்ள நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மத்திய பாஜக அரசிடம் பேசி அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமியின் பேச்சை பாஜக அமைச்சர்களும், மத்திய அரசும் கேட்கவில்லை என்றால், பிகார் மாநிலத்தைப்போன்று நிதீஷ் குமார் ராஜினாமா செய்து, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி மாற்று கூட்டணி வைத்து தற்போது தனித்து ஆட்சி அமைத்துள்ளதுபோல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். மேலும் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் வளர்ப்பது மட்டுமே பாஜகவின் நோக்கம்” என்றார்.

முன்னதாக, மாநில உரிமையை மீட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 200 கிலோமீட்டர் நடைப்பயண இயக்கத்தை நெல்லித்தோப்பு சுப்பையா சிலையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று, நடைப்பயண இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதில் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், மாநிலச்செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாஜக கூட்டணியிலிருந்து முதலமைச்சர் ரங்கசாமி வெளியேற வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்
பாஜக கூட்டணியிலிருந்து முதலமைச்சர் ரங்கசாமி வெளியேற வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்

இதையும் படிங்க: பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.