புதுச்சேரி: புதுச்சேரியில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக கிருஷ்ணா நகர், 45 அடி சாலை, ராஜீவ் காந்தி சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம், எல்லைபிள்ளை சாவடி, மோகன் நகர், செயின்பால்பேட், தாகூர் நகர், வினோபா நகர், வேலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி (CM Rangasamy Inspects) கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (நவம்பர் 18) நேரில் சென்று பார்வையிட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் தேங்கிய மழைநீரை உடனடியாக நீர் இறைக்கும் மோட்டார்கள் மூலம் துரிதமாக அகற்றும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே பிற்பகல் 3 மணிவரை 143 மி.மீ. அளவில் மழை பொழிந்தது தெரியவந்துள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாகூர், கோர்காடு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: அட அவரா இது.. ஒல்லியான ஒன்றிய அமைச்சர்!