ETV Bharat / bharat

புதுச்சேரியில் ரூ.1,000 பொங்கல் பரிசு அறிவிப்பு! - உதவித்தொகை

Pongal Gift: புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் எனவும், அப்பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் வேளாண்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pongal gift announced in puducherry
புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 3:12 PM IST

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் ஏழைகளுக்கு இலவச துணிகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இலவச துணிக்கு பதில், பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரால் செயல்பட்டு வரும் ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மீண்டும் பணமாகவே வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கிழ், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு பொங்கலை முன்னிட்டு ரூ.1,000 வழங்கப்படும்.

அதன்படி பழங்குடியின மக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்து 791 வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில், ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 மற்றும் இரண்டிற்கும் மேற்பட்ட குடும்ப நபர்களைக் கொண்ட அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நேரடி பணப் பரிமாற்றத்தின் (DBT) மூலம் ஜனவரி 4ஆம் தேதியன்று பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இதன் மூலம் ரூ.12.29 கோடி அரசாங்கம் செலவிடுகிறது. புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான பயனாளர்கள் அனைவரது வங்கி சேமிப்புக் கணக்கிலும், இரண்டு மாதத்திற்கான (அக்டோபர் 23 மற்றும் நவம்பர் 23) உதவித்தொகை முதல்வரின் வழிகாட்டுதலின்படி செலுத்தப்பட்டு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2024 புத்தாண்டை வரவேற்க ரெடியாகும் தமிழ்நாடு மக்கள்..! போலீசார் பாதுகாப்பு தீவிரம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.