ETV Bharat / bharat

புதுச்சேரி: 3 நியமன எம்எல்ஏ.,க்கள் நியமனம் செல்லும்- சென்னை உயர் நீதிமன்றம் - நியமன எம்எல்ஏ.,க்கள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jun 2, 2021, 2:33 PM IST

Updated : Jun 2, 2021, 6:48 PM IST

14:20 June 02

புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏ-க்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ். மேலும், பாரதிய ஜனதா எம்எல்ஏ.,க்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 10ஆம் தேதி அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமனம்

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையின், நியமன எம்.எல்.ஏ.,க்களாக கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரியும், இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

நியமன உத்தரவு உத்தரவு செல்லாது?

அந்த மனுவில்,’புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்காத நிலையில், 3 நியமன நிர்வாகிகளை நியமிக்க எந்த அவசரமும் இல்லை.

சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமானது’என அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்.எல்.ஏக்.,கள் நியமனம் தொடர்பாக, மாநில அமைச்சரவை, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரையை வழங்கும். ஆளுநர் அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய பின்னர் நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படாததால், 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பான உத்தரவை செல்லாது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நியமன உத்தரவு செல்லும்!

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளதாகவும், இவர்கள் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனும் வாதிட்டனர்.

அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்த மனுவை ஏற்கக்கூடாது என நியமன எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு பதவியில் உள்ளவரை மட்டுமே எம்.எல்.ஏ வாக நியமிக்க முடியாது என்பதால், ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏக்களின் நியமனமும் செல்லும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். 

Last Updated : Jun 2, 2021, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.