ETV Bharat / bharat

இரவு நேரப்பணியில் ரவுடிகளால் தாக்கப்பட்டதாகக்கூறி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் பாதிப்பு - மருத்துவர்கள் போராட்டம் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தி போராட்டம்

இரவு நேரப் பணியில் ரவுடிகளால் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து, புதுச்சேரி கதிர்காம அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest demanding an end to violence against trainee doctors in Pondicherry Kataragama Hospital

author img

By

Published : Jun 29, 2022, 4:26 PM IST

புதுச்சேரி: மருத்துவர் மீதான வன்முறையைத் தடுக்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு கதிர்காம மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் இன்று (ஜூன்.29) போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 24ஆம் தேதி இரவுப்பணியில் இருந்த பயிற்சி மருத்துவரை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கினர்.

மருத்துவர்களைத் தாக்கிய இருவர் மீது மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து தங்களுக்கு இரவு நேரப்பணியின்போது பாதுகாப்பு இல்லை என்றும்; பயிற்சி மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த கோரிக்கை பதாகைகளை ஏந்தி மூன்று மணி நேரம் தங்கள் பணிகளைப் புறக்கணித்து 200-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் காலை மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க: மருத்துவர்கள் அலட்சியத்தால் சிசு இறப்பு - பாதிக்கப்பட்டவர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.