ETV Bharat / bharat

“விநாயகர் அனைத்து தடைகளையும் நீக்குவார்” - புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முதல் உரை!

New Parliament Building Prime Minister Modi First Speech: பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்தியா தயாராகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் காலடி எடுத்த வைத்த உடன் விநாயகர் அனைத்து தடைகளையும் நீக்குவார் என புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமர் மோடி தனது முதல் உரையை ஆற்றினார்.

Modi
Modi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 1:35 PM IST

Updated : Sep 19, 2023, 4:56 PM IST

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் ஐந்து நாட்கள் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று (செப். 18) தொடங்கியது. முதல் நாள் கூட்டம் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற நிலையில், இன்று (செப். 19) இரண்டாவது நாள் சிறப்பு கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது.

  • #WATCH | Ahead of the proceedings of Lok Sabha in the New Parliament building, Speaker Om Birla says "Today is a very important day in the history of democracy as we are starting the proceedings of Lok Sabha in the new Parliament building. We are fortunate enough to witness this… pic.twitter.com/g6tnuUg7Iz

    — ANI (@ANI) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பாக அனைத்து கட்சி எம்பிக்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் நுழைந்து அவரவருக்கு உள்ள இருக்கையில் அமர்ந்தனர். தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி, உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் உரையில், “பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்தியா தயாராகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் காலடி எடுத்த வைத்த உடன் விநாயகர் அனைத்து தடைகளையும் நீக்குவார்” என்று தெரிவித்தார்.

மேலும், “புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வந்த இந்த நாள் (செப்.19) ஒரு புதிய தொடக்கத்தைக் காட்டுகிறது. இன்றைய உரை பெண்களை மையமாகக் கொண்டுள்ளது. சமுதாயத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் மகளிர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், சில காரணங்களால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. இந்த சந்தர்பத்தை அளித்த கடவுளுக்கு நன்றி. அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது” என கூறினார்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி : குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

தொடர்ந்து பேசிய பிரதமர், “கடந்த காலங்களில் உள்ள இருள்களை அகற்றி உலக அளவில் இந்தியாவை உயர அனைவரும் உறுதிமொழி எடுப்போம். சுதந்திர இந்தியா குறித்து பேச லோக் மான்ய திலகர் பற்றி குறிப்பிட வேண்டும். அதாவது, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து பேசுகிறோம்” என குறிப்பிட்டார்.

இன்று "சம்வத்சரி" கொண்டாடப்படுகிறது. பாரம்பரியம் மிகுந்த இந்த நாளில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவை கூடியுள்ளது. மேலும், இன்று "மிச்சாமி துக்கடம்." இந்த தினம் நாம் தெரிந்தும், தெரியாமலும் புண்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் நாள். அதனால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட நாட்டு மக்கள் அனைவரிடமும் "மிச்சாமி துக்கடம்" கேட்க விரும்புகிறேன் என கூறினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்புடைய செங்கோல் ஒற்றுமையின் சின்னம். நேருவுடன் தொடர்புடைய இந்த புனித சின்னம், புதிய கட்டடத்திலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்ட 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்கள் உழைப்பை அளித்துள்ளனர். எனவே, கட்டடத்தை வடிவமைக்க உழைத்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என உரையாற்றினார்.

இதையும் படிங்க: "மசோதா யார் கொண்டு வந்தது.. நாங்க கொண்டு வந்தது" - மகளிர் இடஒதுக்கீடு குறித்து சோனியா காந்தி!

Last Updated : Sep 19, 2023, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.