ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியின் 74ஆவது பிரிவு இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி நேற்று (டிசம்பர் 27) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகின் மிகப் பெரிய மற்றும் துடிப்புமிக்க ஜனநாயக நாடான இந்தியாவை வலிமை மிக்கதாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றும் காவல் துறையின் பணிகளை போற்றுகிறேன். நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்காற்றிவருகிறது. பணியின்போது, தங்களது இன்னுயிரை தியாகம் செய்த காவல் துறை அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
-
President Droupadi Murmu addressed the probationers of the 74th Batch of the Indian Police Service at the Sardar Vallabhbhai Patel National Police Academy, Hyderabad today.
— President of India (@rashtrapatibhvn) December 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details: https://t.co/dutIsPgqaW pic.twitter.com/cQQ6zz3w81
">President Droupadi Murmu addressed the probationers of the 74th Batch of the Indian Police Service at the Sardar Vallabhbhai Patel National Police Academy, Hyderabad today.
— President of India (@rashtrapatibhvn) December 27, 2022
Details: https://t.co/dutIsPgqaW pic.twitter.com/cQQ6zz3w81President Droupadi Murmu addressed the probationers of the 74th Batch of the Indian Police Service at the Sardar Vallabhbhai Patel National Police Academy, Hyderabad today.
— President of India (@rashtrapatibhvn) December 27, 2022
Details: https://t.co/dutIsPgqaW pic.twitter.com/cQQ6zz3w81
காவல் துறை என்பது அரசின் மிக முக்கியமான அங்கம். காவல்துறை மக்களின் நம்பிக்கையை பெறும் போது அரசின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். கடைநிலையில் உள்ள காவலர் வரை அனைவரும் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும். ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் தங்களது பணியை துவங்கும் போதிலிருந்தே தலைமைப் பண்புகளுடன் திகழ வேண்டும். தலைமைப் பண்பு திறன் மிகுந்த செயலாற்றலை உறுதி செய்யும். ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, துணிவு, திறமை மற்றும் உணர்திறன் ஆகிய 5 அடிப்படை பண்புகளை மனதில் வைத்து காவல் துறை அதிகாரிகள் தங்களது செயல்திறனை நிரூபிக்க வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திலும் சமூக மாற்றத்திலும் காவல் துறையினர் பங்காற்ற வேண்டும். நீடித்த வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவையே வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். குரலற்றவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்காக காவல்துறையினர் செயல்பட வேண்டும். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் ஏழை கிராமவாசிகளை உள்ளூர் காவல் நிலையங்களில் கருணையுடன் அணுகுவதை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.
குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும் என்று அதே நேரம் சாதாரண மனிதர்கள் காவல் துறையினரை நண்பராகவும் தங்களை காப்பாற்றுபவராகவும் கருதும் வகையில், காவலர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். மகளிர் முன்னேற்றத்திற்கு தேசம், முன்னுரிமை அளித்து செயல்படுகிறது. அனைத்துத் துறைகளிலும், பெண்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கும். பெண் காவல் அதிகாரிகள், பெண்களுக்கு குறிப்பாக பாதிக்கப்படும் பெண்களுக்கு அதிக அளவில் உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகள் உள்பட பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்