ETV Bharat / bharat

ஐசியுவிலிருந்து சிறப்பு வார்டுக்கு குடியரசுத் தலைவர் மாற்றம்!

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில்  ஐசியு பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு குடியரசுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

President Kovind
ராம்நாத் கோவிந்த்
author img

By

Published : Apr 3, 2021, 1:11 PM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதயப் பிரச்சினை காரணமாக ராணுவ மருத்துவமனையில் கடந்த மார்ச் 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

பின்னர், குடியரசுத் தலைவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ராணுவ மருத்துவமனை பரிந்துரைத்தது.

அதன்படி அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு இதயம் தொடர்பான கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்திட முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி, மார்ச் 30ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து (ஐசியு) குடியரசுத் தலைவர், சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் மாளிகை ட்வீட் செய்துள்ளது.

அந்த ட்வீட்டில், "தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு குடியரசுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் குடியரசுத் தலைவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் - ராணுவ வீரர்கள் செய்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.