ETV Bharat / bharat

பெருந்தொற்றை எதிர்கொள்ள தேசிய அளவிலான கொள்கை தேவை - சோனியா காந்தி - சோனியா காந்தி காணொலி பதிவு

அரசியல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி அரசு பெருந்தொற்றை கட்டுப்படுத்த தேசிய அளவில் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி
author img

By

Published : May 1, 2021, 5:15 PM IST

நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவரும் நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இன்று ஒட்டுமொத்த தேசமே கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்து போராடிவருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த அனைத்து குடிமக்களுக்கும் சோதனையாக மாறியுள்ள சூழலில் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டிய தருணம் இது.

பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், படுக்கைகள், அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான சூழலை உணர்ந்து மக்கள் அனைத்து முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ள வேண்டும். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்.

மத்திய மாநில அரசு விழிப்பு நிலை பெற்று மக்கள் துயரை போக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் காக்க அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 செலுத்தப்பட வேண்டும்.

சோனியா காந்தி காணொலி

அனைவருக்கும் தடுப்பூசி பேதமின்றி வழங்கப்பட வேண்டும். அரசியல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி அரசு பெருந்தொற்றை கட்டுப்படுத்த தேசிய அளவில் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.

இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள ஒற்றுமை ஒன்றே வழி. இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா நோயாளிகளை இலவசமாக ஆட்டோவில் அழைத்துச் செல்லும் ஆசிரியர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.