புது டெல்லி: இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கனிசமாக குறைய தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,51,209 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நேற்று 19.59 சதவீதம் இருந்த நிலையில் இன்று 15.88 சதவீதமாக குறைந்துள்ளது.
இதனையடுத்து இதுவரை இந்தியாவில் கரோனா மூன்றாவது அலையில் 627 பேர் இறந்துள்ளனர். கரோனா தொற்று எண்ணிக்கையும் 21,05,611 ஆக குறைந்துள்ளது.
தடுப்பூசியால் குறைந்த தொற்று எண்ணிக்கை
முழுமையான மற்றும் விரிவான தடுப்பூசி இயக்கத்தினால் மட்டுமே கரோனா தொற்று குறைந்து வருவதாகவும், புதிய ஒமைக்ரான் தொற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என இந்திய மத்திய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழன் அன்று மத்திய சுகாதர அமைச்சகத்தின் அறிவிப்பில், நாட்டின் 95 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மான்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில்,
“ இந்தியா அதன் மக்கள் தொகையில் 95 சதவீதத்திற்கும் மேலான மக்களுக்கு கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் சுகாதர ஊழியர்களும், பொதுமக்களும் விரைவாக செயல்பட்டதால் இந்தியா கரோனாவிற்கு எதிரான இந்த போரில் தொடர்ந்து முன்னேறி வருகிறது” என தெரிவித்துள்ளார். இதையும் படிங்க:கர்நாடகாவில் அதிகரிக்கும் கரோனா...!