ஹைதராபாத் (தெலங்கானா): தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் மே 28ஆம் தேதி 17 வயது சிறுமியை 5 பேர் சொகுசு காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் 5 பேரில் 3 பேர் பள்ளி மாணவர்கள் என்பதும், அனைவரும் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
காவல் துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, ஆதாரங்களை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
காவல் துறையினர் இந்த வழக்கில் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். சதுதீன் மாலிக் மற்றும் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு நபரான உமர் கானிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் வழக்கில் குற்றஞ்சாட்டப்படும் எம்எல்ஏவின் மகன் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 6ஆவதாக எம்எல்ஏவின் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப் ஊழியர்கள் மற்றும் பலரிடம் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எப்ஐஆர் நகல் மற்றும் A1, A2 யார் என்பது குறித்து காவல் துறையினர் இன்னும் முழுமையாக தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க: சொகுசு காரில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்புணர்வு... 5 பேரில் 3 பேர் பள்ளி மாணவர்கள்...