ETV Bharat / bharat

ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு - latest news

அனைத்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களிலும் அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவளித்துள்ளார்.

ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி

author img

By

Published : Apr 16, 2021, 4:29 PM IST

டெல்லி: நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து இடங்களிலும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையடுத்து, மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்சிஜன் உருளைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கரோனா பாதிக்கப்பட்ட மக்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, மக்களின் நலனை கருதி பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 16) கூறுகையில் ’’கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்கள் அனைவரும் மிக கவனமாக இருக்கு வேண்டும். எனவே, மக்களின் நலனை கருதி நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், ஆக்சிஜன் தயாரிக்கப்படும் அனைத்து இடங்களில் கொள்ளளவுக்கு ஏற்ப ஆக்சிஜன் உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும்.

மேலும், அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் 24 மணி நேரமும் கட்டாயமாக இயங்க வேண்டும். அதேபோல, ஆக்சிஜன் ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களும் தடையில்லாம் செல்ல காவல்துறையினர் கவனித்து கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் நாளொன்றுக்கு 15 காவலர்கள்வரை கரோனா பாதிப்பு - காவல் துறை ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.