ETV Bharat / bharat

ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்! - மனதின் குரல்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பகாரியா கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்கள் நீர் பாதுகாப்பை திறம்பட ஏற்றுக்கொண்டதற்காக, மான் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்!

author img

By

Published : Jul 30, 2023, 3:31 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30ஆம் தேதி), மான் கி பாத் (மனதின் குரல்) என்ற பெயரில், 103 வது மாதாந்திர வானொலி உரையை நாட்டு மக்களுக்கு ஆற்றினார். வெள்ளம் போன்ற பேரிடர்களை சமாளிக்க மக்களின் கூட்டு முயற்சிகளுக்காகவும், அதுகுறித்த விழிப்புணர்வைக் காட்டியதற்காக, நாட்டு மக்களைப் பாராட்டினார். 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கிட்டத்தட்ட 60,000 அம்ரித் சரோவர்கள், நாடு முழுவதும் 50,000 எண்ணிக்கையில் கட்டப்பட்டு வரும் அதே வேளையில், அவைகள் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குவதாக குறிப்பிட்டு உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 30 கோடி மரக்கன்றுகள் நடுவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொதுநல திட்டங்களில் பொதுமக்கள் தீவிரமாகப் பங்கேற்பதற்கு இது ஒரு சாதனை மற்றும் சிறந்த உதாரணம் என குறிப்பிட்டு உள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் சமீபத்தில் மேற்கொண்ட பயணம் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பகாரியா கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இன மக்கள், சுமார் நூறு கிணறுகளை மழை நீர் ரீசார்ஜ் மையங்களாக மாற்றி உள்ளதன் மூலம் நீர்-சேமிப்பு முறைகளை திறமையாக ஏற்றுக்கொண்டதாகக் கூறி உள்ளார்.

12,000 கோடி ரூபாய் மதிப்பிலான 10 லட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்து இந்தியா புதிய சாதனை படைத்து உள்ளது. போதைப் பழக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். நாட்டின் சுதந்திர தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி 'ஹர் கர் திரங்கா' நிகழ்ச்சியின் தேசபக்தி பாரம்பரியத்தை தொடர மக்களை அவர் வலியுறுத்தி உள்ளார்.

சவுதி அரேபியா நாட்டு அரசின் ஹஜ் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களை மேற்கோள் காட்டி உள்ள பிரதமர் மோடி, 4,000க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் 'மெஹ்ரம்' (ஆண் துணை) இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொண்டதாக குறிப்பிட்டு உள்ளார். பேரிடர் காலங்களில் கூட்டு முயற்சியின் சக்தியைக் காட்டியதற்காக நாட்டு மக்களைப் பாராட்டிய அவர், வெள்ளத்தின் போது சரியான நேரத்தில் பதிலளித்ததற்காக NDRF (தேசிய பேரிடர் மீட்புப் படை) மற்றும் ராணுவத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளார்.

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி மவுனம் கலைக்கவும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடவும் எதிர்க்கட்சிகள், தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். 21 எம்பிக்களைக் கொண்ட இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் (INDIA( எம்.பி.க்கள் குழு, மணிப்பூரின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, இரண்டு நாட்கள் பயணமாக, அங்கு சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Manipur Issue: ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்த INDIA கூட்டணி எம்.பி.க்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.