டெல்லி: நடந்து முடிந்த 16ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் இன்று (ஜூலை 3) டெல்லியில் சந்தித்தனர். அவர்களின் சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உடனிருந்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி," இன்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி, சி.கே.சரஸ்வதி ஆகியோரை சந்தித்து உரையாடினேன். அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மலர்ந்த நான்கு தாமரைகள் பிரதமருடன் சந்திப்பு!