லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவருடன் அம்மாநில முதலமைச்சர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அப்போது பேசிய பிரதமர், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வங்கி கணக்கில் ரூ.1000 கோடி நிதி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 16 லட்சம் பெண்கள் பலனடைவர். அத்துடன் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்காமல் இருக்க திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில், கன்யா சுமங்கலா திட்டத்தின் ரூ.20 கோடி நிதியில் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ரூ.15 ஆயிரம் வரை நிதி வழங்கப்பட உள்ளது. பெண் குழந்தை பிறப்பின் போது ரூ.2000, ஓராண்டு தடுப்பூசி நிறைவில் ரூ.1000, ஒன்றாம் வகுப்பு சேர்ந்தால் ரூ.2000, ஆறாம் வகுப்பில் சேர்ந்தால் ரூ.2000, 9ஆம் வகுப்பில் சேர்ந்தால் ரூ.3000, கல்லூரி படிப்பை முடித்தால் ரூ.5000 என வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 200ஐ எட்டிய ஒமைக்ரான்