ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி திட்டம்: பாராட்டு கூறிய இலங்கை பிரதமருக்கு மோடி நன்றி!

author img

By

Published : Jan 17, 2021, 1:18 PM IST

டெல்லி: இந்தியாவில் தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபக்‌சவுக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

கரோனா
கரோனா

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் நேற்று (ஜன-16) தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக, முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

இது குறித்து இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா தொடக்கியதற்கு வாழ்த்துகள். பேரழிவு தரும் தொற்றுநோய்க்கான முடிவின் தொடக்கத்தை நாம் காணத் தொடங்குகிறோம்" எனப் பதிவிட்டிருந்தார்.

  • Thank you @PresRajapaksa. The tireless efforts of our scientists and frontline workers have played a crucial role in the fight against this pandemic. Fast development of vaccine and its launch is an important landmark in our joint endeavour for a healthy and disease free world. https://t.co/Lj50fkPm8g

    — Narendra Modi (@narendramodi) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், "எங்களுடைய விஞ்ஞானிகள், முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பு இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பணி, ஆரோக்கியமான நோயற்ற உலகை உருவாக்கும் உலக நாடுகளின் கூட்டுமுயற்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.