ETV Bharat / bharat

தேசிய ஜனநாயக கூட்டணி காலத்தால் சோதிக்கப்பட்டது - பிரதர் மோடி! - என்டிஏ கூட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டணியில் உள்ள கட்சிகளின் பிராந்திய லட்சியங்களை நிறைவேற்ற பாஜக உறுதி கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

NDA
NDA
author img

By

Published : Jul 18, 2023, 8:34 PM IST

டெல்லி : பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி காலத்தால் சோதிக்கப்பட்ட கூட்டணி என்றும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற எதிர்க்கட்சிகளை காட்டிலும் முன்னணியில் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக கட்சிகள் இரு அணிகளாக பிரிந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மும்முரம் காட்டி வருகிறது.

அதேநேரம், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியை உருவாக்கி மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், கூட்டணியில் உள்ள கட்சிகளின் பிராந்திய லட்சியங்களை நிறைவேற்ற பாஜக உறுதி கொண்டு உள்ளதாக பதிவிட்டு உள்ளார். முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டை பலப்படுத்தவும், சேவை செய்யவும் சிறந்த கூட்டணி என்று தெரிவித்தார்.

பாஜக மட்டுமே அது உருவானதில் இருந்து சித்தாந்த ரீதியாக செயல்பட்டு வருவதாகவும், ராமர் கோயிலாக இருந்தாலும் அல்லது 370வது சட்டப் பிரிவை நீக்கியதாக இருந்தாலும் வலுவான தேசத்தை உருவாக்க முன்நிற்பதாக தெரிவித்தார். 2024ஆம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரம் தொகுதி பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்னா தள் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான அனுபிரியா பட்டேல் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து எந்த விதமான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரம் பாஜக தலைமை தனித்தனியாக மாநிலக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 38 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : மும்பையில் 3வது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் - விரைவில் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.