டெல்லி: மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "பலருக்கும் உத்வேகமாக திகழும் சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் பெண்களின் அசைக்க முடியாத சக்தியை வெளிப்படுத்துகிறார். அவருடைய வாழ்க்கை, பெண்களுக்கு கல்வி மற்றும் அதிகாரத்தை அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. சமூக சீர்திருத்தம், சமூக சேவை இரண்டிலும் அவர் கவனம் செலுத்தியது இப்போதும் உத்வேகம் அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்.
— Narendra Modi (@narendramodi) January 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்.
— Narendra Modi (@narendramodi) January 3, 2023வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்.
— Narendra Modi (@narendramodi) January 3, 2023
இதேபோல் தமிழ்நாட்டின் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளுக்காக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனிய ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நலனுக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறைகளை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் அறிவியல் தற்சார்பை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி