ETV Bharat / bharat

Gandhi Jayanthi: குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை!

Gandhi jayanti 2023:காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

draupadi murmu modi
திரௌபதி முர்மு மோடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 11:39 AM IST

டெல்லி: மகாத்மா காந்தியின் 154வது பிறந்த் நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தேசத் தந்தை மகாத்மா காந்தி, தற்போது குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர்பந்தரில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு அவரது 154வது ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும், வாழ்க்கைக்கான தத்துவங்களுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்த, மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில், இன்று (அக். 2) அவரது காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அதன்படி காந்தியின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மேலும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தி குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள குறிப்பில், "மார்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா போன்ற பல உலகத் தலைவர்கள் காந்தியின் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றுள்ளனர். அவரது துடிப்பு மிக்க வலிமையான எண்ணங்கள் எப்போதும் உலகிற்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும்.

  • “His thoughts were not merely idle musings, but an outcome of his sustained practice. That philosophy which is not made part of life was, according to him, "dry as dust". Thoughts, words and deeds were of a piece, in his case.” — President Droupadi Murmu pays tribute to Father of…

    — President of India (@rashtrapatibhvn) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மக்கள் அனைவரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டின் நலனுக்காக காந்தியின் போதனைகள், செயல்களை பின்பற்ற வேண்டும்" என பதிவிட்டு உள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடி தனது x தளத்தில் "மகாத்மா காந்திக்கு தலை வணங்குகிறேன். காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன.

மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது, அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒற்றுமை, இரக்க உணர்வை மேலும் வளர்க்க தூண்டுகிறது. காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம். இளைஞர்களுக்கு ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் வகையில் அவரது எண்ணங்கள் உதவட்டும்" என்று பதிவிட்டு உள்ளார்.

  • I bow to Mahatma Gandhi on the special occasion of Gandhi Jayanti. His timeless teachings continue to illuminate our path. Mahatma Gandhi's impact is global, motivating the entire humankind to further the spirit of unity and compassion. May we always work towards fulfilling his…

    — Narendra Modi (@narendramodi) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக காந்தியடிகளின் பிறந்த நாளை, தூய்மை இயக்கத்தின் மூலம் அனுசரிக்க்க வேண்டும் என்று, அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடத்தப்படும், அதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: CM MK Stalin : தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதே திராவிட மாடலின் திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.