அசாம்-மிசோரம் மாநில எல்லையில் ஜூலை 26ஆம் தேதி இரு மாநில காவல்துறைக்கும் மோதல் வெடித்தது. இதில் மோதலில் அசாமைச் சேர்ந்த ஆறு காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் மாநிலங்களிடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இரு மாநில முதலமைச்சர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிைலையில், அசாம் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் குழு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியது. இந்தச் சந்திப்பின் போது அங்கு நிலவும் கள நிலவரம் குறித்து பிரதமர் மோடி உன்னிப்பாக கேட்டறிந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமூகத் தீர்வுக்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். முன்னதாக மிசோரம் ஆளுநர் ஹரி பாபு கபாம்பதி மிசோரம் மாநிலத் தரப்பை முன்வைத்தார். இவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.16 கோடி ஊசி செலுத்தியும் உயிரிழந்த 11 மாத குழந்தை... மகாராஷ்டிராவில் சோகம்!